Monday, January 27, 2014

உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அற்புதம் ; காத்தான்குடியில் சம்பவம் !!

காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் காலை உண­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட ரொட்­டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்­ பட்­டுள்­ளது. இது பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, காத்­தான்­குடி பி.ஜே.எம்.வீதி­யி­லுள்ள மர்சூக் என்­ப­வரின் வீட்டில் காலை உண­வுக்­கான ரொட்டி தயா­ரிக்­கப்­பட்ட வேளை ரொட்­டியை தயா­ரித்து முடிந்த பிறகு அந்த ரொட்­டியின் மேல் பகு­தியில் அல்லாஹ், முகம்மத் என காணப்­பட்­டுள்­ளது. இதை­ய­டு த்து இந்த ரொட்­டியை சாப்­பி­டாமல் விட்­டுள்­ளனர்.

இந்த ரொட்­டியை தயா­ரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்­க­வில்­லை­ யெ­னவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்­ட­வுடன் தான் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­ கவும், இது ஒரு அற்­பு­த­மாகும் எனவும் இந்த ரொட்­டியை தயா­ரித்த அந்த வீட்டின் சகோ­தரி தெரி­வித்தார். இதை பலரும் அந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comments :

Ossan Salam - Doha ,  January 27, 2014 at 12:11 PM  

இது போன்ற முட்டாள் சம்பவங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த பெறுமானங்களுமில்லை. ஏதோ ஒரு வீட்டில் சுடும் ரொட்டி சற்று கரித்து விட்டால் அதுவும் அகஸ்மாத்தாக மொழியொன்றின் அமைப்பில் அதுவும் தெளிவான எழுத்துக்களல்லாமல் இருந்தும் இது ஏதோ இறைவனின் அதிசயம் என்று பறைகொட்டுவது அறிவீனமே அன்றி அறிவு சார்ந்த விடயமல்ல. இதன் மூலம் யாரும் விளம்பரம் தேட முயற்சிப்பது இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தும் காரியமல்ல என்பதை சம்பந்தப்படவர்கள் உணர வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com