வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்!
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகள் பெற்றுவந்த விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிரகாஷ் என்ற இந்த நபர் இலங்கையில் இருந்து சில வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்ததுடன் இரகசியமான முறையில் இலங்கைக்கு திரும்பிய இவரை கடந்த வருடம் ஜூலை மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் பேயரில் கைது செய்து பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலையே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்
இவர் யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் இவரை கைது செய்வதற்காக இவர் பற்றிய சகல தகவல்களும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment