Thursday, January 30, 2014

இராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் மக்களைப் பாதுகாப்பதுமே- யாழ் இராணுவ தளபதி உதயபெரேரா

இராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வ தும் மக்களைப் பாதுகாப்பதும் ஆகும் எனவே தனது சக் திக்கு உட்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களுக்கு செய் வதற்கு தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் யாழ். பலாலி படைமுகாமில் நேற்று புதன்கிழமை வலிகாமம் கிழக்கு விவசாயிகளுக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேராவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பேதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 'நீங்கள் என்னுடன் வெளிப்படையாக பேசுவதை நான் விரும்புகின்றேன் என்பதுடன் கடந்த 25 ஆம் திகதி ஈ.பி.டி.பி. யின் முக்கியஸ்தர்களுடனான சந்திப் பின் போது, அவர்களால் எனக்கு தெரிவிக்கப்பட்டது இராணுவத்தினர் விவசாய உற்பத்திகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டது எனவே இதற்கு தீர்வு காண்பதற்காக நான் உங்களை அழைத்ததாக தெரிவித்தார்.

இதனைவிட தற்பொழுது இராணுவ முகாம்களை அகற்றி மக்களுடைய வீடுகளை யும் விவசாய நிலங்களையும் ஒப்படைத்து வருகிறோம் இந்த நிலையில் இராணுவத்தினர் அகற்றப்பட்டவுடன் களவுகள் நடைபெறுவதாக மக்கள் எமக்கு தெரிவிக்கின்றார்கள் எனினும் அது சிவில் நிர்வாகப் பிரச்சினை என்பதுடன் அதனை பார்க்க வேண்டியது பொலிஸாரே இருந்தும் மக்களின் பாதுகாப்பு கருதி நாங்கள் இராணுவத்தை இரவு வேளைகளில் வீதி ரோந்துகளில் ஈடுபடுத்தியுள் ளோம்.

விவசாயிகளின் உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்கும் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தையில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இராணுவத்தினருக்கு தேவையான பொருட்களை மக்களிடம் பெற்று அதில் பயன்பெற வேண்டும் என்றே நினைக்கிறேன் இந்த நிலையில் உடனடியாக 300 லீற்றர் பசுப்பாலை 60 ரூபா படியும் முட்டைகள், இறைச்சி, கோழிகள், சிரட்டைகள் ஆகியவற்றில் 75 சதவீதமான வற்றை கொள்வனவு செய்வதற்கு தயாராக உள்ளோம் எனக்குறிப்பிட்டார்.

இதனை விட மேலும் 10 சலவைத் தொழிலாளிகளும் 20 சிகை அலங்காரத் தொழிலாளிகளுக்குமான தேவை எமக்கு தேவையாக உள்ளது எனவே இவை அனைத்தையும் நாம் தமிழ் மக்களிடம் இருந்தே எதிர்பார்க்கிறோம் என்பதுடன் டெங்கு ஒழிப்பு, பாதினிய ஒழிப்பு ஆகியவற்றை விவசாய அமைப்புக்களுடனும் பொது அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து மேற்கொள்ள இராணுவத்தினர் எந்த நேரத்திலும் தயாராகவே இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com