Tuesday, January 21, 2014

பாம்பு பாதி - பெண் பாதி அதிசய சிறுமி !!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றம ளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்து டனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்ற த்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, ´செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்' அல்லது ´ஜிங் ஜிங் நோய்' என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com