Tuesday, January 21, 2014

போலி நாணயத் தாள்களின் பாவனை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: பொலிஸ் ஊடக பேச்சாளர்!

வடக்கில் போலி நாணயத் தாள்களின் பாவனை தொடர் ந்தும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரோகண இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலி ஸாருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண் டுமென்று கிளிநொச்சியில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட மக்கள் வங்கிக்கு அருகிலுள்ள மாவட்ட இன ஐக்கிய கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

மேலும் போலி நாணயத்தள்களின் பாவனை வடக்கு மட்டுமின்றி நாட்டின் சகல பகுதிகளிலும் பரவலாக அதிகரித்து வருகின்றதுடன் வடக்கு மாகாணத்தில் இது மிக வேகமாக அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றது எனக்குறிப்பிட்டார்.

இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில், தற்போதும் பாவனையில் போலி நாணயத் தாள்கள் இருப்பதாகவே அறிகின்றோம் எனவே இத்தகைய போலி நாணயத் தாள்கள் ஏதாவது கண்டறியப்பட்டால் அதனைப் பாவனைக்குட்படுத்தாது பொலிஸாருக்கு உடனடியாகவே அறிவிக்க வேண்டும் இதன் மூலமாகவே இதனைக் கட்டுப்படுத்த முடியுமென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com