காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலன்புரி வேலைத்திட்டம் - கிளிநொச்சியில் ஆரம்பம்!
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீள் எழுச்சியை கருத்திற் கொண்டு காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டம் நேற்று முதற்கட்டமாக கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக் கப்பட்டதுடன் இந்த வேலைத்திட்டம், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை போன்று பயங்கரவாத செயற் பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் 4 செயலாளர் பிரிவுகளில் காணாமல் போனோனோரின் 426 குடும்பங்களுக்கு நேற்று முதற்கட்ட நிவாரணங்கள் வழங்கப் பட்டன.
பாதுகாப்பு அமைச்சு சட்டமும், ஒழுங்கு அமைச்சு, பொதுநிர்வாக உள்நாட் டலுவல்கள் அமைச்சு, சிறுவர் அபிவிருத்;தி மகளிர்; விவகார அமைச்சு , சமூக சேவைகள் அமைச்சு, சமுர்த்தி அதிகார சபை, புனருத்தாபன அதிகார சபை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன ஒன்றிணைந்து குறித்த நலன்புரி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவரு கின்றன. இதன்மூலம் அங்கவீனமுற்றவர்கள், வயோதிபர்கள், விதவை களுக்கான விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் , சுயதொழில் புரிபவர்களுக்கான உபகரணங்களும், தொழிற்பயிற்சி வழிகாட்டல்களும், சமூர்த்தி நிவாரணம், மீள்கடன் போன்றனவும் இதன்போது வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கான மரண சான்றிதழ்களும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும், இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கிளிநொ ச்சியிலுள்ள ஒத்துழைப்பு கேந்திர நிலையத்தில் நேற்று முழுநாள் நிவாரண நடவடிக்கைகள் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார். மேலும் வடமாகாண ஆளுனர் ஜீ ஏ சந்திரசிறி, அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் வாகிஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment