Monday, January 20, 2014

புற்று நோயை தீக்கும் துளசி எண்ணெய்!


மருத்துவ குணங்களை கொண்ட செடிகளில் ஒன்றாக துளசிச் செடி இருப்பதால் இன்றும் பல வீடுகளில் துளசியை வளர்த்து வரும்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணவும் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டதுடன் வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக உதவி பேராசிரியர் சந்திகாந்த் மாணி இந்த ஆய்வு முடிவுகள் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் குறிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளதுடன் இதில் குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைவிட துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யில் அதிக மருத்துவ குணம் உள்ளது என்பதுடள் அந்த எண்ணெய்யை புற்றுநோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவிய போது தடவப்பட்ட இடத்தில் காணப்பட்ட புற்றுநோய் பரப்பும் செல்களின் வளர்ச்சி நின்றுபோனது எனவே இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com