Monday, January 6, 2014

விண்வெளி ரொக்கெட் மையம் அமைக்க சிறந்த நாடு இலங்கை - நாஸா

குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது இதற்கு இலங்கை ஏன் சரியான இடம் என்பதற்கும் நாஸா சில உதாரணத்துடன் தெவித்துள்ளது.

இதனடிப்படையில் சிறப்பான காரணங்களில் முதலாவதாக இலங்கை ஒரு தீவாக இருப்பதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த நாட்டின் அமைப்புப் போன்றவை விண்வெளி ரொக்கெட்களின் மையமொன்றை அமைப்பதற்கு பெரிதும் பொருத்தமானது என தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது இலங்கை எப்போதும் புயல்கள், சுழல் காற்றுக்கள் இல்லாதிருப்பதுடன் தெளிவான வான் பரப்பொன்றைக் கொண்டிருப்பதும் விண்வெளி ரொக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவும் போது எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏதும் நிகழுமானாலும் அது கடலில் விழும் நிலை காணப்படுவதால் இலங்கையில் விண்வெளி ஏவுதளம் அமைப்பது பெரிதும் பாதுகாப்பானது என நாஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 comments :

Tharik January 6, 2014 at 5:08 PM  

JR ஜனாதிபதியாக இருந்த போது VOICE OF AMERICA நிலையம் அமைய அனுமதி வழங்க இருக்கும் போது அது இந்தியாவுக்கு பிடிக்கவில்லை.இலங்கையை சீரளிப்பதுக்கு பயங்கரவாதத்தை வளர்த்தது இந்திரா.அதே பயங்கரவாதத்தால் அம்மாவும் பிள்ளையும் செத்தார்கள்.தற்சமயம் ஓரளவு அமைதி இருக்கும் போது அடுத்த இடி அமெரிக்காவில் இருந்து வருகிறது.இந்தியாவி சொல்லுக்கு ஸ்ரீ லங்கா ஆட மறுத்தால் மீண்டும் கோகிலாவா?

Mohamad January 11, 2014 at 7:41 AM  

Dear in what perspective they can save fuel? is sri lanka more near to space?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com