Wednesday, January 29, 2014

வவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு


தாண்டிக்குளத்திலிருந்து கல்மடு வரையான வீதி புனரமைப்பு பணிகளின்போது மருக்காரம்பளை பகுதியில் வெட்டப்பட்ட வடிகானிலிருந்த மண் பானை ஒன்றில் இருந்து 120 செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

இந்த நாணங்கள் எந்தக் காலத்தைச் சார்ந்தவை என்பது தொடர்பில் ஆராயும் பொருட்டு அவற்றை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் கூறினார்.

இருப்பினும், கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பு நாணயங்கள் தற்போது மாவட்ட அரசாங்க அதிபரின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பார்வையிட்ட யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் குறித்த நாணயங்கள் 11 – 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com