Tuesday, January 21, 2014

தேசத்துரோகத்தை செய்துவிட்டு தனிப்பட்ட கருத்தெனக் கூறி தப்பிக்க முடியாது! கத்தோலிக்க சபை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!

யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தத்தில் படை யினர் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி மக்களை கொன்றார்களென அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீபன் ரெப்பிடம் தெரிவித்தமை பாரதூரமான தேசத்துரோக கருத்தாகும்.

யாழ், மன்னார் ஆயர்களின் கருத்துகள் மற்றும் கத்தோ லிக்கசபை வெளியிட்ட மேய்ப்பனின் அறிக்கையும், இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணைபோவ தாக தேசத்துரோகமானதாகவுமே அமைந்துள்ளன. எனவே, கத்தோலிக்க சபை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் இல்லாவிட்டால் கத்தோலிக்க மக்களே நெரு க்கடிகளைச் சந்திக்க நேரிடும் என தர்மபால பரம்பரா (தர்மபால பரம்பரை) அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கில் கத்தோலிக்க இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காகவே எதிர்க்கட்சியில் உள்ளோரும் கத்தோலிக்க சபை முக்கியஸ்தர்களும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த ஆபத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவ்வமைப்பு தெரிவித்தது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தர்மபால பரம்பரா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அஸ்கிரி விகாரை செயற்குழு உறுப்பினர் மெதகம தம் மானந்த தேரர்

யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்த கருத்தாகது பாரதூரமானது ஆனால், இதன் பாரதூரமான விளைவுகளை பொருட்படுத்தாத கத்தோலிக்க சபை இக்கருத்து ஆயர்களின் தனிப்பட்ட கருத் தெனக் கூறி தப்பிக்க முயல்கிறது. யுத்த காலத்திலும் கத்தோலிக்க குருமார் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தனர்.

எனவே, இவ்வாறான தொடர்புகளுக்கும் கத்தோலிக்க சபைக்கும் தொடர்புள்ளது. இதனை மறுக்க முடியாது. தற்போது யுத்தத்திற்கு பின்னரும் பிரிவினை வாதத் திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் யாழ் மன்னார் ஆயர்கள் தெரிவித்த கருத்தால் குறித்த ஆயர்களுக்கு பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்திருந்தன மதகுரு மார் தத்தமது மத சம்பந்தப்பட்ட பணிகளுடன் சமூகப் பணியாக நாட்டினதும், தாம் சார்ந்த சமூகத்தினதும் நன் மைக்காக செயற்படவேண்டுமென்பதே அனைவரதும் எதிர் பார்ப்பு என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இல்லாத இலங்கையின் இறைமைக்கும் குந்தகம் ஏற்படுத்தகூடிய கருத்துக்களை தெரிவிப்பதால் இலங்கைக்கு எந்தபாதிப்பும் ஏற்படபோவதில்லை மாறாக அது தமிழ் மக்களை பாதிப்பதாகவே அமையும் அத்துடன் யாழ் மன்னார் ஆயர்கள் தெரிவித்த கருத்து வீம்பிற்காகச் செயற்படும் எதிர்க்கட்சியினரது பொய்ப் பிரசார வேலை எனச் சர்வமதத் தலைவர்களும், கல்விமான்களும், சிவில் சமூகத்தினரும் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு பயங்கரவாதப் பிடியிலிருந்த போது கொடூரமான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முனைந்த சில மதகுருமார் இப்போது மீண்டும் அதேமாதிரியான தொழிலில் ஈடுபட்டு வருவதனைக் காண முடிகிறது என பல்வேறு தரப்பினரும் குற்றம் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது

2 comments :

Arya ,  January 21, 2014 at 8:56 PM  

நாட்டை அந்நியர்களிடம் காட்டி கொடுக்கும் இவன்களை போன்ற சகல மேற்கத்தைய உளவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இவன் மத குரு அல்ல பாதர் அங்கி போட்ட கிரிமினல்.

Anonymous ,  January 23, 2014 at 3:12 AM  

Both fathers are LTTE TERRORIST CRIMINELS.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com