அதிகாரிகள் தவறை அமைச்சரிடம் எடுத்துரைத்து மாணவிக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தது ஊடகவியலாளர்கள்!
போட்டியின் இறுதித் தீர்பை மாற்றிய அதிகாரிகள் தவறை நிகழ்வில் உடனடியாகவே அமைச்சரிடம் எடுத்துரைத்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தது யாழ்.ஊடகவியலாளர் குழு.
அரச கரும ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி தொடரில் வெற்றி பெற்ற மாணவர்கட்கான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கேடையம் வழங்கும் நிகழ்வு இன்று(28.01.2014) யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற போதே இந்தச்சம்பவம் நடைபெற்றது.
இந்தச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மேற்படி தமிழ் மொழி மூலமான விவாதப்போட்டியின் இறுதிப் பேட்டியில் பங்கு பற்றிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மற்றும் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் முடிவில் வித்தியானந்தாக் கல்லூரி வெற்றி பெற்றதாகவும் தொடரின் சிறந்த பேச்சாளராக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி எழில் நாகேந்திரறாஜ அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நடுவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கேடையங்கள் வளங்கப்படும் போது வித்தியானந்தா கல்லூரி மாணவன் எம்.தமிழரசன் தொடரின் சிறந்த பேச்சாளர் என தெரிவித்து வெற்றிக் கேடையம் வளங்கப்பட்டது.
இதனை தொடர்து பேட்டியின் இறுதியில் மாணவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் இன்றைய நிகழ்வுக்கு குறித்த மாணவியும் வந்திருந்ததுடன் தனக்கு கிடைக்க வேண்டிய சிறந்த பேச்சாளருக்கான வெற்றிக் கேடையம் வேறு பாடசாலை மாணவனுக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து குறித்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் பதில் ஏதும் வழங்கப்படவில்லை.
இதனால் குறித்த மாணவி தனக்கு நியாயம் கிடைக்க வில்லை என்பதை நிகழ்வை படம்பிடிக்க வந்த ஊடகவியளார்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் உரிய அதிகாரிள் மற்றும் அமைச்சருக்கும் தெரியப்படுத்தியதை தொடர்ந்து குறித்த பிரச்சினையை செவிமடுத்த அதிகாரிகள் குறித்த மாணவனையும் கூப்பிடடு பிரச்சினையை ஆராய்ந்ததுடன் மாணவனும் குறித்த விருது பேட்டியின் இறுதியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி எழில் நாகேந்திரறாஜவுக்கே என தெரிவித்ததாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட தவறுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ஆகியோர் சிறந்த பேச்சாளருக்கான வெற்றிக் கேடையத்தை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிக்கு வழங்கிவைத்தார்.
இறுதியில் தமக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக போராடிய ஊடகவியலாளர்களுக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியரும் நன்றி தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment