Sunday, January 12, 2014

லயன் ஏர் விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகள் அடையாளம் காண்பதற்காக!

1998 செப்டெம்பரில் இரணைதீவுக் கடலில் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் ஏர் விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை அடையாளம் காண்பதற்காக யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக சில பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்டனோவ்- 24 விமானம், புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியதாக கருதப்பட்ட நிலையில், கடந்த வருடம் அவற்றின் பாகங்கள், பயணிகளின் உடைமைகள், பெண் ஒருவரின் அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டிருந்ததுடன் மீட்கப்பட்டவற்றில் சில உடைமைகள் யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன்,  பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸா நாயக்க தலைமையிலான குழுவினரால் மக்கள் மத்தியில் அடையாளம் காண்பதற்காக விசாரணையும் நடைபெற்றுவருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com