Wednesday, January 8, 2014

காணாமற் போனதாக தெரவிக்கப்பட்ட நபர் வீடு திரும்பினார்! தான் எவ்வாறு கடத்தப்பட்டடேன் என விளக்கம் கொடுக்கிறார்!

காணாமற் போனதாக தெரவிக்கப்பட்ட கொட்டாஞ்சேனை யைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்ற நபர் இன்று வீடு திரும் பியுள்ளார். கொழும்பு, மெயின் ஸ்ரிட் பகுதியில் இறக்கு மதி வியாபரத்தில் ஈடுபட்டுவந்த சங்கரலிங்கம், வங்கிக்கு நேற்று முன்தினம் மதியம் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரிவில்லை எனவும் அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நே ற்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த நபர் இன்று மதியம் ஒரு மணிக்கு அவர் வீடு திரும்பி யுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அத்துடன் தான் கடத்தப்பட்டமை தொடர்பில் சங்கரலிங்கம் விபரிக்கையில்,

வங்கியிலிருந்து வெளியில் வரும்போது கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் வெள்ளை சட்டை, கறுப்பு காற்சட்டை உடுத்தியிருந்த ஒருவர் என்னை சிங்கள த்தில் அதட்டிக் கூப்பிட்டார். நான் அவரருகில் சென்று என்னவென்று கேட்டபோது அருகிலிருந்த வானுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டார்கள். வானுக்குள் மூவர் இருந்தனர். என்னை சத்தம் போடவேண்டாம் என்றும், சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டி வான் ஆசனத்தில் படுக்குமாறு பணித்தனர்.

அதன் பின்னர் என்னை எங்கோ ஒரு வீட்டில் அடைத்து வைத்து, என்னிடமிருந்த 8 லட்சம் பணத்தினையும் பறித்துக்கொண்டு, இன்று மதியம் என்னை ஆமர் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றனர். இவ்விடயம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com