Wednesday, December 11, 2013

மனித உரிமைகள் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட அதிகமானவர்கள் குவிவு!(படங்கள் இணைப்பு)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பத்தரமுல்லை தியத்த உயன பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “புத்தி பிரபோதினி” எனும் புகைப்படக் கண்காட்சியை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (10.12.2013) திறந்துவைத்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மனித உரிமைகளுக்கான இளைஞர்கள் மன்றம் மற்றும் உரிமைக்கான பாதை அமைப்பு என்பன இணைந்த ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமான கண்காட்சி நாளை (12.12.2013) வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை பார்வையாளர்கள் பார்வையிடக்கூடியதாக உள்ள இக்கண்காட்சியில் இதன் கருப்பொருள் சார்ந்த ஆவணப்படங்களும் திரையிடப்படுவதால் இதனை கண்பதற்காக அதிகமானவர்கள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com