Monday, December 2, 2013

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்தால் மட்டுமே முடியும்: பசில் ராஜபக்ஷ

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டு சக்திகளினாலோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களினாலோ தீர்வு காண முடியாது இலங்கையின் பிரச்சினையை இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமேதீர்வு காண முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது எமது நாட்டில் காணப்படும் பிரச்சினை எமது நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவே எமது பிரச்சினையை எம்மால் மட்டுமே தீர்வு காண முடியும் என தெரிவித்ததுடன் வெளிநாட்டவர்களுக்கு எமது நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றிய உண்மைத்தன்மை தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் தேர்தல்களின் மூலம் மட்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது எனவும், அரசாங்க நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  December 2, 2013 at 4:11 PM  

We have to solve our problems under our own roofs.How you would solve your family disputes,you some or other try to finish it under your own roof.If you call the third party they will make it bigger and bigger and finally you may get tne negative results.India is our neighbouring country.May be a friendly country.We do respect India.We never interfere in their internal or external matters.India too need not to poke its nose into our matters.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com