Monday, December 2, 2013

பாதுகாப்பு இல்லாமல் மகள்களுடன் கடைக்கு சென்று புத்தகம் வாங்கிய ஒபாமா!

சாதாரண உடையில், வாகன நெரிசல் நெருக்கமான பகுதியில் தனது மகள் சாஷா, மாலியா ஆகியோருடன் காரில் சென்று பொருட்களையும் புத்தகங்களையும் வாங்கினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் விழா கொண்டாடப்பட்டு வருவதையொட்டி சிறு சிறு பரிசு பொருட்களை அமெரிக்கர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர் இதற்கான விற்பனையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வணிக நிறுவனங்கள், தள்ளுபடியை அறிவித்துள்ளன.

இதனால் அங்கு கடைகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது இதற்கிடையே, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், இந்த தள்ளுபடி விற்பனையில் தனது மகள்களுடன் பொருட்களை வாங்குவதற்காக சாதாரண உடையில் எந்தவித பாதுகாப்பு கெடுபிடியும் இல்லாமல் வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள புத்தக கடைக்கு சென்று ஏராளமான புத்தகங்களை வாங்கியதுடன் பிற வாடிக்கையாளர்களுடன் வரிசையில் நின்று புத்தகங்களுக்கு பணம் செலுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com