நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப் படாததால் சீற்றமடைந்த த.ம.வி.க உறுப்பினர் -யு.எம்.இஸ்ஹாக்
நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் சபையின் நட வடிக்கைகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருப்பதை வண் மையாக கண்டிக்கின்றேன் என நாவிதன்வெளி பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஏ.சுதர்சன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சபையில் சமர்ப்பிக்கப்படுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டி ருந்தது. அதற்கான ஆயத்தங்களுடன் சபைக்கு சமூகமளித்த போது சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இன்று பிற்பகல் 1.30 மணிவரை தவிசாளர் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு உறுப்பினர்களும் பிரதேச சபையில் இருந்துவிட்டு சுகயீனம் காரணமாக சபையின் இன்றைய நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க முடியாதென கடிதத்தை வழங்கி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஏனைய உறுப்பினர்களுக்கு எதுவித முன்னறிவித்தலும் வழங்கப்படவில்லை.
நாவிதன்வெளி பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப் பட்டால் தோற்கடிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே இவ்வாறான செயற்பாடு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது நாவிதன்வெளி பிரதேச மக்களை ஏமாற்றும் செயலாகும். இதனை மக்கள் நன்கு புரிந்த கொள்ள வேண்டும். நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை ஏமாற்றும் செயலாகும் எனவும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்ட உதவித் தவிசாளர் ஏ.ஆனந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ஏ.சுதர்சன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். ஐ. தஜாப்தீன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட் ஆகியோர்கள் பிரசன்னமாயிருந்தனர்.
0 comments :
Post a Comment