வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று செல்வோருக்கு புதிய விதிமுறைகள்!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று செல்லும் இல ங்கையர்கள் விமானநிலையத்தில் பதிவு செய்யத் தேவை யில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
விமான நிலையத்தில் தொழில் ஒப்பந்தம் குறித்து ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தநிலையில் எந்தவொரு பிரஜையும் வெளிநாட்டு தொழில்வாய் ப்பை பெற்று நாட்டை விட்டு வெளியேற முன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விமான தளத்தில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன. எனினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment