தமிழ் இணையங்களால் கொல்லப்பட்ட யாழ் யுவதி.
அதிர்ச்சியான செய்திகளை வெளியிட்டு வாசகர்களை கவரும் மலிந்த வழிமுறையினை தமிழ் இணைய ங்கள் பன்னெடுங்காலங்களாக கடைப்பிடித்து வருகின் றன. புலிகள் ஊசலாடியபோது புலிகளின் அராஜகங் களை நியாயப்படுத்தி வந்த இணையத் தளங்கள் தற்போது செய்திகளுக்கு சிங்கள இணையத்தளங் களையும் செய்தித்தாள்களையும் நம்பி நிற்பதுடன் ஆங்காங்கே வடகிழக்கு நிலைமைகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பிரபல்யம் தேடி நிற்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் யுவதி ஒருவர் முகப்புத்தகத்தில் தகவல்களை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இச்செயற்பாட்டினால் முகநூல் நண்பர்கள் அதிர்சி அடைந்துள்ளார்களாம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தனர்.
தனிப்பட்ட பழிவாங்கலுக்காக இணைத்தள நடாத்துனர் ஒருவரின் உதவியால் வெளியிடப்பட்ட முற்றிலும் உண்மைக்கு புறம்பான மேற்படி செய்தியை மீள் பிரசுரம் செய்வதற்கு தமிழ் இணையத்தளங்கள் முண்டியடித்துக்கொண்டன.
ஆனால் இச்செய்தியை வெளியிடுவதால் குறித்த யுவதிக்கோ அன்றில் அவரது உற்றார் உறவினர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அவர்கள் கவலையடையவில்லை.
மேற்படி இணையத்தள ஆசிரியர்களின் செயற்பாடு செம்மறிக்கூட்டத்தை நினைவுக்கு கொண்டுவருகின்றது.
செம்மறிக்கூட்டக்கதை :
செம்மறிகள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்ததாம். அவ்வாறு ஓடுகின்றபோது பாதையில் தடி ஒன்று குறுக்கே கட்டப்பட்டிருந்ததாம். முதலாவது செம்மறி தடிக்கு மேலால் துள்ளி ஓடியதாம். இரண்டாம் செம்மறி முன்றாம் செம்மறி என சில செம்மறிகள் அவ்விடத்தில் துள்ளி ஓடிச்சென்றதாம். ஒரு செம்மறியின் காலில் தட்டுப்பட்டுப்பட்டு தடி கீழே விழுந்து விட்டது. ஆனால் பின்னால் வந்த அத்தனை செம்மறிகளும் அவ்விடத்தில் துள்ளியே ஓடியதாம்.
இவ்வாறே நமது இணையங்களின் செயற்பாடுகளும் உள்ளது. செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பாக எந்த புலன் விசாரணைகளும் கிடையாது. அவன் போட்டான் நானும் போட்டேன் எனப் பதில் வருகின்றது. அதாவது முன்னால் ஓடின செம்மறி துள்ளி ஓடினது நானும் துள்ளி ஓடினேன் என்ற பதில் போல்.
2 comments :
இணையத்தளங்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் “யாழ். யுவதியும், உறவினர்களும் பாதிப்பு”!! (இது எப்படி இருக்கு?) - See more at: http://www.athirady.com/tamil-news/howisthis/305069.html#sthash.KJ4tyMLI.dpuf
Post a Comment