புகைப்படம் எடுக்த ஊடகவியலாளர்களை; மிரட்டிய ரவிந்து குணவர்தன !!
பம்பலப்பிட்டியை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன ஊடகவிய லாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதி மன்றத்திற்கு எதிரில் அவர் ஊடகவியலாளர்களை அச்சு றுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் ரவிந்து குணவர்த னவை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். ஊடகவியலாள ர்கள் விற்று பிழைப்பதற்காக தம்மை படம் பிடிப்பதாகவும் பிடித்த படத்தை பெரி தாக போட்டு விற்று பிழைக்குமாறும் ரவிந்து குணவர்தன அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த குணவர்தனவின் உறவினர்களும் ஊடகவியலார் களை அச்சுறுத்தியுள்ளனர்.அங்கிருந்த ஒருவர் சிறைச்சாலை பஸ்களுக்கு அருகில் சென்றதுடன் அதில் இருந்த வாஸ் குணவர்தனவிடம் படம் பிடிப்பவர்களால் வெளியிடப்படும் படங்களை சேகரித்து வைத்து கொள்ளுமாறு கூறியதாக ஊடக வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment