குற்றத்தை தாங்கள் வைத்துக்கொண்டு இலங்கை மீது கருத்துதெரிவிப்பது நகைப்புக்குரியது!
இலங்கையின் மத சுதந்திரம் தொடர்பில் கருத்து தெரிவி க்கும் ஒரு சில மேற்கு நாடுகள் தங்களது நாடுகளின் மத சுதந்திரம் தொடர்பில் அறியாமல் இருப்பது நகைப்புக்கிட மானது எனவும், இலங்கைக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்படு மானால் குறித்த நாடுகளில் இடம்பெறும் மத துஸ்பிரயோ கம் தொடர்பான தகவல்களை வெளியிட தயாராகவுள்ள தாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்தரை பயாகல தோட்டத்தில் 60 வருட பழமை வாய்ந்த கோயிலுக்கு பதிலாக புதிய ஆலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல கொத்தலாவலவும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டார். 40 இலட்சம் ரூபா செலவில் இவ் ஆலயம் நிர்மாணிக்கப்படவுள்ளது. தென் இந்திய சிற்பிகளின் பங்களிப்புடன் இக் கோயில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித உரிமை தொடர்பில் குற்றம் சுமத்தும் மேற்கு நாடுகள் தமது நாடுகளில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பில் அசட்டையாக இருப்பது கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு அருகில் பௌத்த கொடியொன்று வைக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை குற்றஞ்சுமத்தினார். நோர்வேயில் புரட்ஸ்தாந்து மதத்தை தழுவிய ஒருவர் வேறொரு மதத்தை தழுவுவுதற்கு அனுமதியில்லை. நோர்வே சட்டத்திலும் இதற்கு அனுமதியில்லை.
பாராளுமன்றத்தின் தாயகமாக கருதப்படும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், அமெ ரிக்காவின் காங்கிரஸ் சபையிலும், செனட் சபையிலும், அமர்வகளை ஆரம்பிப் பதற்கு முன்னர் அருட் தந்தை ஒருவர் ஆராதனை செய்த பின்னரே பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பர்.
ஆனால் எமது நாட்டில் அப்படியில்லை. பௌத்த அனுட்டானங்களுடன் பாராளு மன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படுவதில்லை. ஏனைய மத ஆராதனைகளும் நடை பெறுவதில்லை. இலங்கையின் அரசியல் யாப்பில் அனைத்து உரிமைகளுக்கும் சமவுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சில நாடுகளின் அரசியல் யாப்பில் ஏனைய மதங்கள் சுதந்திரமாக செயற்பட தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்நாடுகள் சர்வதேசத்திற்கு மனித உரிமைகள் தொடர்பான கற்பிக்க முனைகின்றன. தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தால் இதற்கு உரிய பதிலடிகளை கொடுக்க வேண்டி ஏற்படும்.
0 comments :
Post a Comment