Saturday, December 14, 2013

மான்னார் மாந்தை வீதியில் விபத்து; இராணுவ சிப்பாய் பலி

மன்னார்,மாந்தை பிரதான வீதியில் நடைபெற்ற வாகன விபத்தில் இராணுவ கப் வாகனத்தின் சாரதியான இராணுவ சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த இரு இராணுவ வீரர்களும் மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பெரிய மடுவிலிருந்து மன்னாருக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்தும் தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக பயணித்த கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com