Friday, December 13, 2013

எல்.ரீ.ரீ.ஈ க்கும் புலம்பெயர் புலிகளுக்கும் வக்காளத்து வாங்கும் த.தே.கூ வடமாகாண மீனவர்கள் தொடர்பில் மௌனிப்பது ஏன்?

எல்.ரீ.ரீ.ஈ க்கும் புலம்பெயர் புலிகளுக்கும் வக்காளத்து வாங் கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண மீனவர்கள் தொடர்பில் மௌனிப்பது ஏன் எனவும், வடக்கு கடலை ஆக் கிரமித்து மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இந்திய மீன வர்கள் தொடர்பிலும் அவர்களது செயலை கண்டிக்காத ஜெயலலிதா தொடர்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

வடபகுதி மக்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை சீர்குலைக்கும் செயற்ப் பாட்டில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் வடபகுதியிலுள்ள கடல்வளங்களை அழிக்கின்றனர். தடை செய்யப்பட்ட வலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இலங்கை மீனவர்க ளுடைய வாழ்வாதாரத்திற்கே பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடாத்தியும் உரிய பலன் கிடைக்கவில்லை.

வடபகுதி மீனவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உயர்ந்தபட்ச நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மீனவர் களது பிரச்சினையை விட அரசியல் இலாபம் முக்கியமாக காணப்படுகிறது. இதன்காரணமாகவே இந்திய மீனவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதில்லையென பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com