Friday, December 27, 2013

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வு!

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளையகம் ஒழுங்கு செய்த 2013 ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு (27.12.2013) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் அலுவல்கள் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் நடை பெற்றது. கிறிஸ்மஸ் நிகழ்வை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்

இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தினரினால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு பரிசிலும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிறிஸ்தவ மதத்தலைவர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, இராணுவ உயர் அதிகாரிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் இசைத்தவண்ணம் யாழ். நகரை வலம் வரும் அலங்கார ஊர்திப் பவனியும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com