ரயிலில் தீ அனர்த்தம்! தப்பிக்க முயன்றவர்களில் மூவர் ரயிலில் மோதுண்டு பலி!
மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த ரயிலின் என்சினில் தீப்பற்றிக் கொண்டமையினால் குறித்த ரயிலில் இருந்து பாய்ந்த மூவர் மற்றுமொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டு ள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்பிக்க முயன்றவர்களில், கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
0 comments :
Post a Comment