Monday, December 30, 2013

ராஜபக்சவுக்கு சந்திரிகா சவால் ஆனவர் அல்ல : கெஹலிய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவா­லா­னவர் அல்ல என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்துள்ளார்.

மேலும் எமது நாட்டு மக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவு­ட­னேயே உள்­ளதுடன் அவரின் வேலைத்திட்டங்­களை எதிர்­பார்த்­துள்­ளனர். குறிப்பிட்டு சொல்லுவதானால் மக்­களை பொறுத்த வரை கதா­பாத்­தி­ரங்கள் என்­பது முக்­கி­ய­மல்ல. அவர்கள் என்ன கொள்­கையில் உள்­ளனர் என்­பதே முக்­கி­ய­மாகும். எனவே அந்த கோணத்தில் நோக்­கு­கையில் ஜனா­தி­பதி மஹிந்­தவின் கொள்­கை­களை மக்கள் முழு­மை­யாக ஏற்­றுள்­ளனர் என்று அமைச்சர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மட்­டத்தில் ஆரா­யப்­பட்­ட­தாக வெளி­வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதனை விட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார­நாயக்க குமாரதுங்கவை ஜனா­தி­பதி தேர்தலில் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக தக­வல்கள் வந்­துள்­ளன. ஆனால் அவை குறித்து மேலதிகமாக எந்த விடயமும் தெரியவில்லை. ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எந்தவகையிலும் சவா­லா­னவர் அல்ல. இதனை உறு­தி­யாக கூற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com