Wednesday, December 11, 2013

சாரதியின்றி ஓடிய 'பேய்' ரயில்? விசாரணைகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

கடந்த வாரம் ரயில் என்ஜின் ஒன்று சாரதி இல்லாத நிலையில் ரயில் பாதையில் திடீரென பயணித்த சம் பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும் குறித்த என்ஜினின் சாவி சம்பவம் இடம்பெற்ற போது பாதுகாப் பான வைப்பில் இருந்துள்ள போதிலும் அதனை மறித்து நிறுத்திய போது அதிலிருந்து மற்றுமொரு சாவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை போன்ற திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரால் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவை தான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தாக தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10 நாட்களுக்குள் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவுடன் அதன் உண்மை நிலைமை தொடர்பில் தகவல்கள் வெளியிட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கான நவீன மயப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறைமை தொடர்பாக தயாரிக்கப்பட்ட நகல் வெளியிடும் நிகழ்வு நேற்றுக்காலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் குமார வெல்கமவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன. அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் அது தொடர்பில் பல விடயங்களை விரிவாக தெரிவிக்க முடியும். குறித்த என்ஜின் பிரதான தண்டவாளத்திற்குள் பிரவேசித்த உடனே சாரதியின்றி சென்றுள்ளமை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாட்டு அறையிலும் பதிந்துள் ளது.

எனினும் அந்த என்ஜினை இடைநடுவில் மறித்திருந்தால் தண்டவாளம் புரண் டிருக்கும். அவ்வாறு புரழும் பட்சத்தில் அன்றைய தினம் காலை அந்த தண்ட வாளத்தில் பயணிக்க பட்டியலிடப்பட்டிருக்கும் ரயில் போக்குவரத்தில் பெரும் தாமதம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். இதனை தவிர்க்கும் வகையிலேயே இரத்மலானை வரை அனுப்பி வைக்கப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டியில் மூன்று அதிகாரிகள் சென்று பாய்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

என்ஜினை நிறுத்தும் போது அதன் வாயில் சாவி தொங்கிய வண்ணம் இருந்து ள்ளது. எனினும் என்ஜினுக்குரிய சாவி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்துள்ளது. பழைமையான என்ஜின் என்பதால் இதற்கு சகல சாவிகளையும் பயன்படுத்த முடியும் எஸ் – 11 ரக சாவியே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த என்ஜின் பயணித்த போது சகல ரயில் கடவைகளும் தானாக மூடப்பட் டுள்ளது. ஏனெனில் அது jputorPatizP முறையில் செயற்படும் ஒன்றாகும். குறித்த கடவைக்கு சாரதி உள்ளாரா இல்லையா என்பதை பார்க்காது தண்டவாள த்திற்குள் வந்தால் அது செயற்படும் என்றார். என்றாலும் இது நாசகாரிகளின் செயலா இயந்திர கோளாறா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதேபோன்று அலவ்வை பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தின் போது அதன் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அந்த ரயிலின் சாவி காணாமல் போயிருந்தது. அது இன்னும் கிடைக்கவில்லை. சிலநேரம் அந்த சாவிதான் பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியாத புதிராக உள்ளது. அதேபோன்று பேயின் செயலாகவும் கூறப்படுகிறது. இதனையும் மறுக்கவோ தட்டிக் கழிக்கவோ முடியாது என்றார்.

சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்கள் எவரும் இல்லாததால் வாக்குமூலம் பெறுவதில் விசாரணைக் குழுவினர் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ. ஏ. பீ. ஆரியரத்ன தெரிவித்தார். எனவே குறித்த என்ஜினை மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு வந்து இயக்கி மீண்டும் பயிற்சித்து பார்க்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றார்.

1 comments :

Anonymous ,  December 11, 2013 at 3:06 PM  

ஸ்ரீ லங்காவில் நடைபெறும் பல கொலைகள் சரியாக விசாரிக்கப்டாமல் தவிர்க்கப்படுகின்றன. அதிகமானவை அரசியல்வாதிகளின் தலியீடுகலினால் நீதி நியாயங்கள் இன்றி மறைக்கப்படுகின்றன.

இதனால், சிலரின் ஆத்மாக்கள் சாந்தியடவதில்லை. அவர்களின் திருப்தியற்ற ஆவிகள் அவ்விடத்தை விட்டோ அல்லது கொலைகாண காரனமானவர்களையோ விட்டோ செல்லாது. ஆவிகளுக்கு உருவம் இல்லாவிடினும் மனிதர்ர்களுக்கு மேலான சக்தியும், வலுவும் உள்ளது. ஆவிகளுடன் எவரும் போட்டி போடமுடியாது. ஆவிகளின் வெற்றி இவ்வுலகில் எங்கோ, எப்போதொ ஒருநாள் நிச்சயமாகும்.
அதன் பின்னரே அந்த ஆவிகள் இவ்வுலகை விட்டு பிரபஞ்சத்திலுள்ள வேறு ஒரு உலகம் போகும்..
அங்கு மறுபிறவி எடுக்கும்.

அவற்றை பற்றி சில பழமையான மதங்களில் கூறப்பட்டுள்ளது, எனினும் தற்கால விஞ்ஞானிகள் சிலர் அதை ஆராய முயற்சிக்கிறார்கள், ஆனாலும் அவர்களின் வலு, திறன் ஒப்பீட்டளவில் சூரியனுக்கும் மின்விளக்குகும் உள்ள இடைவெளியாகும். எனவே விஞ்ஞானம் பதில் தரபோவதில்லை.

ஆவிகள் என்பது உண்மை. நாம் அவைகளினால் இயங்கிகொண்டிருகிறோம். நாம் ஆவிகளின் படைக்கப்பட்டவர்கள். எமது உருவம், உடம்பு இவ்வுலகில் மறந்துவிடும். ஆனால் எமது ஆவி அழிவதில்லை. இது உண்மையான உண்மை.. நம்புங்கள அதற்கு வே நாம் இறந்த பின்னர் அழிந்து விடும்

ஆத்மஞானி ஸ்ரீ ஷிரிடி

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com