Saturday, December 7, 2013

ஓடும் பஸ்ஸிலிருந்து சாரதி தவறிவிழுந்ததால் பலி!!

மட்டக்களப்பு, கிரான்குளத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸின் வாயிலில் இருந்து தவறிவிழுந்த பஸ் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் களுவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸின் வாயிற் படியில் நின்றபடி வந்து கொண்டிருந்த மற்றுமொரு பஸ்ஸின் சாரதி ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் நின்றபடி வெற்றிலை மென்றுகொண்டிருந்த சாரதியான செட்டிபாளையத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (44) என்பவர், ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் சாரதியிடம் தண்ணீர் வாங்கி வாய் கொப்பளிக்க (வாய் கழுவ) முயன்ற வேளையிலேயே தவறி விழுந்து மரணமாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com