Tuesday, November 26, 2013

நேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்

நேபால் நாட்டின் லும்பினியில் அமைந்துள்ள மாயா தேவி ஆலயத்தில் பௌத்த மதம் தொடர்பான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவை கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் மாறுபட்ட தகவலை வெளியிடுவனவாக அமைந்துள்ளன.

புத்தரின் பிறப்பு தொடர்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டுக்கு முன்னதாகவே அவர் பிறந்திருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது பிறந்த இடமான லும்பினியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது பல்வேறு புதிய படிமங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் புத்தரின் பிறப்பு கி.மு.623 களில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுவந்தமையை மறுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், கி.மு.390 களில் அவர் பிறந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இங்கு மேலும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கக் கூடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் நேபாலின் வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதாக அந்நாட்டின் கலாசார,சுற்றுலாத்துறை அமைச்சர் ராம் குமார் ஸ்ரெஷ்தா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com