Saturday, November 2, 2013

நாங்கள் சரியாகத்தான் எதிர்வு கூறுகின்றோம்.. பொதுமக்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதிருக்கின்றது. –வானிலை அவதான நிலையம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உபகரணங்கள் மிக வும் பழைமையாக இருப்பதனாலேயே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சரியான முறையில் அவதானிப் பினை மேற்கொள்ள முடியாதுள்ளது என்ற கதை பரவி வருகின்றது என்றாலும், அது வானிலை அவதான நிலையம் பற்றி அறியாதவர்கள் கூறும் கதையே என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர், ஜயசேக்கர குறிப்பிட்டார்

காலி மாவட்ட அனர்த்தம முகாமைத்துவப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இயற்கை அனர்த்த்ம் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஒன்றுகூடலின்போதே பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு சிறியதொரு பிசகு இருப்பதை நாங்கள் விளங்கிக் கொண்டுள்ளோம். வளிமண்டலவியல் திணைக்களத்தில் உள்ள உபகரணங்கள் பழையதாக இருப் பதுதான் எதிர்வுகூறல் பிழையாவதற்குக் காரணம் என சிலர் விளங்கிவைத் துள்ளார்கள். இதிலிருந்து எங்களுக்கு ஒன்று புரிகிறது. சரியான தெளிவில்லாமல் மக்கள் இருக்கிறார்கள்... என்பது புலனாகின்றது...

தெளிவாக இப்போதெல்லாம் எதிர்வுகூறல்கள் விளங்குவதில்லையாம். அவற்றில் நாங்கள் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அதனால் எதிர்வுகூறல்கள் தெளிவாக விளங்குவதில்லையாம். நான் இவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பாடசாலைக்கு சென்ற நாட்களில் ஆசிரியர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கற்றுத் தந்த எல்லாமே எங்களுக்கு விளங்கியதா? எல்லாமே விளங்கவில்லை. கொஞ்சம்தான் விளங்கின. அதன் பிறகு நாங்கள் வீட்டுக்குப் போய் பாடம் செய்தே ஒருவாறு இந்நிலையை அடைந்திருக்கின்றோம்..

அதேபோல எல்லா எதிர்வுகூறல்களையும் தெளிவாக வேண்டிய தேவையில்லை. அதில் தெளிய வேண்டிய ஒரு பகுதியுள்ளது. அதில் வியாக்கியானங்களும் உள்ளன. என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com