Thursday, November 14, 2013

சிறந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இலங்கை பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்!

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மாகாணசபை தேர்தல் நடாத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக் கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக என புகழ்ந்துள்ள பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில் லியம் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதி க்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்படவேண் டுமெனவும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் கட்டுப்ப டுத்தப்பட வேண்டியது அவசியமானதென பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

உலக அளவிலும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளிலும் இலங்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினர் கைதிகள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் பாலியல் குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவித்த அவர், யுத்தத்தில் கணவரை இழந்த 90000 பெண்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  November 14, 2013 at 12:21 PM  

We do agree with Mr.William Hague.Severe punishment is very essential for sex offenders.Sex stimulating drugs,films,dances and other activites should come to a immediate halt.More religious preachings,religious activities and
discipline among the society is very important.Schools have to play an important role to produce better citizens.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com