Friday, November 1, 2013

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வைத்தியசாலையில் போய் படுத்தது ஏன்? வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்

தமிழ் மக்களிடையே சிங்கள அரசுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தேர்தல் மேடைகளில் அள்ளி வீசி ஜனபதிபதி மகிந்த ராஜபக்ஸவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான தருணம் இது தான் என கத்தியே அமோக வெற்றியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்ததும் நிலமைகள் தலைகீழாக மாறி சிங்கள அரசுடன் கட்டித் தழுவி முத்தமிடும் கூட்டங்கள் ஆக கூட்டமைப்பு மாறியது. எதிர்பார்ப்புகளின் மத்தியில் மக்களிடம் இடம்பிடித்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசுடன் நெருக்கமான உறவு நிலையில் இருக்கின்றார்.

அதனை தடுக்க கூட திராணியற்றவர்களாக தான் கூட்டமைப்பினர் இருக்கின்றனர். இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்த போது பொதுநலவாய மாநாட்டிலும் அமைச்சரவைக் கூட்டத்திலும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களை கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். அதற்கு ஓம் என விக்கியும் கூறிவிட்டார்.

இதன் பின் அமைச்சுப் பொறுப்பை பெறுவதற்காக மீண்டும் ஜனாதிபதியிடம் சென்ற முதலமைச்சர் தனது வரவை உறுதிப்படுத்தியும் உள்ளார். இவ் விடயம் தொடர்பில் ஊடகங்கள் கருத்து வெளியிட்டதும் மாவை சேனாதிராஜா போன்ற கூட்டமைப்பினர் முதலமைச்சர் பொதுநலவாய மாநாட்டுக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கும் செல்லக் கூடாது என தீர்மானம் எடுத்து கட்சித் தலைவர்கள் ஊடகங்களுக்கம் அறிக்கை விட்டிருந்தனர். இது தொடர்பில் மாவையும் முதலமைச்சரும் முரண்பட்டுக் கொண்டமையும் தன்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என முதலமைச்சர் கூறியிருந்தமையையும் எமது இணையம் வெளிப்படுத்தியிருந்தது.

இவ்வாறான குழப்ப நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மகிந்த தலைமையில் நேற்றையதினம் அமைச்சரவை கூட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி நடந்தது. அதில் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிலையில் என்ன செய்வதென்று தெரியாது தடுதளித்த முதலமைச்சர் பொய் சொல்லத் தெரியாத நீதிபதி ஆச்சே. உடனடியாக யாழ் வைத்தியசாலை வைத்தியர்களிட்ட போய் எனக்கு செக்கப் செய்யங்கள். ஏலாமல் இருக்கு. அது மட்டும் நான் இங்கேயே இருக்கிறன் என்று சொல்லிட்டாராம்.

இதால இரண்டு தரப்பிட்டையும் நல்ல பேர் எடுத்திட்டார். சுகயீனம் காரணமாக தான் அமைச்சரவை கூட்டத்திற்கு வரமுடியவில்லை என ஜனாதிபதியிடம் போனில் சொல்லிட்டாராம். தான் கூட்டமைப்பு தீர்மானித்த படி அமைச்சரவை கூட்டத்திற்கு போகேல என்று கூட்டமைப்புக்காரரிட்ட சொல்லுறாராம்.

போற போக்கப் பார்த்தால் இந்த மாதம் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ளதால் முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்ல வேண்டும் அல்லது மீண்டும் வைத்தியசாலையில் போய் படுக்க வேண்டி ஏற்படும் என அவதானிகள் கூறுகின்றனர்.

இப்படி எத்தனை வித்தை எமது முதலமைச்சர் காட்டப் போறார் என்று பாருங்கவன்.

6 comments :

Anonymous ,  November 1, 2013 at 5:27 AM  

அறுபத்தைந்து வருட காலத்த்தில் உருப்படியான விடயம் தமிழரசு, த வி கூ, த தே கூ செய்த பெரிய விடயம் ஒரு நேர்மையான மனிதரை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கியது. நன்றி த தே கூ .

அத்துடன் உங்கள் வேலை முடிந்து விட்ட து நன்றி.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக வாக்களித்து தெரிவு செய்தது மக்கள். ஆனபடியினால் அவரை சுதந்திரமாக இயங்க விடுங்கள் த.தே.கூ.

நன்றி.

ஸ்ரீதரன் டொரொண்டோ

Anonymous ,  November 1, 2013 at 10:32 AM  

May be he is hankering for a good administratiuon,but it seems that he
is hapless.Hapless victim of exploitation.It is really difficult
to say how he would face the situations in future

Anonymous ,  November 1, 2013 at 11:38 AM  

எங்களைப் பொறுத்தளவில் 98% வீத நாடுகள் பங்கு பற்றும் மகாநாட்டுக்கு ஓரிருவர் மட்டும் பங்குபற்றாமல் ஒதுங்குவது புத்திசாலித்தனமல்ல.

எனவே நாமும் பங்கு பற்றி, சந்தர்பங்களை பாவித்து மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.

அதைவிட்டு ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
Who cares us?

மற்றைய நாடுகளுக்கு எமது பிரச்சனையும் தெரியாது போகலாம்.

அத்துடன், ஒருவரும் எங்களை காணவில்லை என்று தேடவும், கேட்கவும் போவதில்லை.

நாம், என்ன அவர்களின் கூடப் பிறப்புக்களா? அல்லது அவர்களின் சம்பந்திகளா?

நன்றாக யோசித்துப் பார்க்கவேண்டும்.!

எங்கள் எல்லோருக்கும் குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை கட்டாய தேவையாகிறது.

எனவே, தயவு செய்து எமது முதலமைச்சரும், இந்திய பிரதமரும் கட்டாயம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.

நல்ல சிந்தனை, பொறுமை, நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும்.

இனியும் எமக்கு சாக்கடை அரசியல் வேண்டாம்.

எங்களின் முடிவு சரியானது,

நன்றி
ஈழத்தமிழ் மக்கள்

Anonymous ,  November 1, 2013 at 12:27 PM  


Dirty minded TNA politicians wants to continue to have the Tamils' problems for their own benefits.

If the problems at least some how solved, The survival of the cunning selfish politicians and their stupid goons is question mark in the future.

The TNA was elected this time, only because of respected chief judge Mr. Vikineswaran.

TNA shouldn't forget that.

Anonymous ,  November 1, 2013 at 4:34 PM  

TNA = LTTE

Anonymous ,  November 2, 2013 at 8:18 AM  

May be CVs political journey seems to be harder one.It looks sturdy and dry.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com