Sunday, November 24, 2013

முரளி, கதிர்காமர் என்பதை உறுதிப்படுத்தினாரே பாருங்கள்...! – முரளியைப் புகழ்கிறார் விமல் வீரவன்ச (படங்கள் இணைப்பு)

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இலங்கை பற்றிய இருண்டதொரு காட்சிப்படத்தை உலகுக்கு எடுத்துச் செல்ல எத்தனிக்கையில், விளையாட்டு வீர்ர் முத்தையா முரளீதரன் காலஞ்சென்ற முன்னாளர் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் போன்று இந்நாட்டை நேசிக்கின்ற தேசாபிமானி என்பதை என்பதை உறுதிப்படுத்தினார் என நிர்மாண, பொறியியல் சேவை வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அதனால் நாட்டின் அபிமானத்திற்காக செயற்பட்ட முத்தையா முரளீதரனுக்கு இலங்கையர் அனைவரும் அவரை கௌரவிக்க வேண்டும் என அமைச்சர் தெளிவுறுத்தினார்.

31 ஆண்டுகளின் பின்னர் 153 இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள திசாநாயகவத்த வீட்டுத் திட்டத்தை பொதுமக்கள் உரிமையாக்கும் விழாவின்போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“இந்நாட்டில் ஏற்படுகின்ற மாற்றங்களை சகிக்க முடியாமல் சில எதிர்ப்புச் சக்திகள் இந்நாட்டில் உள்ளன. எங்கள் நாட்டில் பெறுமதிவாய்ந்த விளையாட்டு வீரனான முத்தையா முரளீதரன் இலங்கை நாட்டின் தமிழ்ச் சகோதரன். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தின்போது ஏற்பட்ட கறுப்பு ஜுலையின்போது அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துன்பியலை அநுபவித்தவர்கள்.

அன்று பிரித்தானியப் பிரதமரும் சனல் 4 ஊடகவியலாளர்களும் இலங்கை தொடர்பாக இருண்ட படமொன்றை வரைந்து உலகிற்கு எடுத்துச் செல்ல கடினமாக முனைந்தபோது, முத்தையா முரளீதரன் காலஞ்சென்ற முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமராக நின்று நாட்டை நேசிக்கின்ற குடிமகன் என்பதை உறுதிசெய்தார். இனமொன்றை ஒற்றுமைப்படுத்துகின்ற இலச்சினையை விளையாட்டு வீரரொருவரைத் தவிர வேறு எவராலும் தரவியலாது. கலைஞரொருவரை எடுத்துக் கொண்டாலும் அவர் சிங்கள மொழியில் கட்டுரைகள் வரைகின்ற, பாட்டுக்கள் இயற்றுகின்ற, திரைப்படங்கள் தயாரிக்கின்ற கலைஞர் எனக் குறிப்பிடலாம். சில நேரங்களில் கலைக்கும் மொழி முக்கியமாகின்ற நேரங்கள் உள்ளன.

சர்வதேச ரீதியில் உலாவருகின்ற விளையாட்டு வீரனிடத்தில் எல்லோருக்குமாக ஒரு மொழியே காணப்படுகின்றது. அதனால் அவர் இந்நாட்டுக்காகச் செய்ய வேண்டிய கடமையைச் செவ்வனே செய்தார். பிரித்தானியப் பிரதமர் டேவின் கமரன் அங்கும் இங்குமாகத் தெரிந்து கொண்ட விடயங்களை வைத்துக் கதைக்கின்றார். நானோ வாழ்க்கையில் கண்ட அநுபவங்களையே கதைக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வால் பிடிக்கின்ற வடக்கின் சில பிரதேச சபைகளிலிருந்து முத்தையா முரளீதரனை விமர்சித்து யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. வால் பிடித்தால் வீரன். மனச்சாட்சிக்கு உடன்பட்டு கருத்துத் தெரிவித்தால் துரோகி. கதிர்காமர் துரோகியானார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத பிரிவினைவாதக் கோட்பாட்டிற்கு வால்பிடிக்கின்றவர்கள் வீர்ர்கள் ஆகின்றார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

3 comments :

Anonymous ,  November 24, 2013 at 11:27 PM  

Well wrigten!

LTTE, LTTE diasporas, LTTE brein washed Tamils - those all are saying that thay are Tamils!

Yes - You are Tamil! so What?

Singhala and Musleems all so people and you also like them!, So, why thay are talking abaut TAMIL TAMIL TAMIL?? IDIOTS!

Thay should anderstand that: When thay are in UK,Canada,Australia, US, Denmark , Norway, Swiss, Germany and etc

Those all countrys have there own people, Tamils are secound people for those all nationalitys and Colors.

Tamils working for all kind of jobs in those countries (Toilet washing,kitchen washin to Lawyers/Doctors and Engineers.

So, You are a normal people, like other! You never say that you are Tamil,You have your own identity and etc!

Evereybody have ther own dentity! thats it.

In Sri Lanka, all people are same like in Europe and all over the world. You living there, you have all rights,you can travel where you want and when.

This is for all Sri lankans!

There are freedom for all peoples!

What can do David Camaroon? What can do Channel 4?

Can thay answer for Britianiens muruders in Sri Lanka before 1940 is??

Can thay give list of all 40000 peolpes list,detailes,adresse,when,where and what happaning for all those people to Sri Lankan Government??

Where Sri Lankan government investigate it??

Can David Camaroon and Channel 4 to LTTE breinwashed people -there Tamil Ealam???

Who is this David Camaroon? Why he is in so active for tamils matter?

Becouse of Election! Why he couldt not give a correct answer to milliband in Parliment??

Why David Camaroon got more then 420000,- Paunds from LTTE tamil Lycatel Company in London???

David Camaroon and Cahannel 4 are Criminels.

Sri Lankan Government should deported those kind of people.

Britishes and Channel 4 should give a answer for all killings field in Sri Lanka before thay left from our country!

David Camroon should give a answer and he must be in Haug for wore crimes, where his British governments Killings field in Sri Lanka in 1940is.

Anonymous ,  November 25, 2013 at 3:02 PM  

ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது இலங்கையில் சகல மக்களும் சமமாக அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றதாயின் ஏன் பிரச்சனைகள் எழுகின்றது?
உதாரணமாக பாராளமன்ற பதவிகள் உட்பட, அரசாங்க திணைக்களங்கள், இராணுவம், போலிஸ் போன்ற அரச பதவிகளில் எத்தனை விகிதமான தமிழர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்? சகல இனங்களும் சமமாயின் ஏன் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்? அத்துடன் இலங்கையில் சகல மொழிகளும் சமமாக் மதிக்கப்படுவதாயின் ஏன் தமிழில் தேசிய பாடலை பாட தடை செய்யவேண்டும்?
அதேபோல் சகல மதங்களும் சமமாக மதிக்கப்படுவதாயின் ஏன் கோவில்கள், பள்ளிவாயல்கள் திட்டமிட்டு இடிக்கப்பட வேண்டும்? இதை புரிந்து கொண்டால் எமது நாட்டின் அடிப்படை பிரச்சனை எவருக்கும் தெளிவாக விளங்கும். முரளிதரனுக்கும் இது விளங்கும்.

Arya ,  November 26, 2013 at 1:17 AM  

Kathirkarmer is to great , and murali is cant compare with Kathirkarmer , he done too great works to Sri lanka and murali only wasted time of sri lanka with that slaves Sport from England.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com