Tuesday, November 26, 2013

ஆக்கிரமிப்புக்களுக்கு அடிபணிந்து வாழ்வதற்கு இந்நாட்டு மக்கள் ஒரு போதும் தயாரில்லை! மகிந்த

இலங்கை சுதந்திரத்தையும், இறைமையையும் மதிக்கும் ஒரு நாடாகும். ஆக்கிரமிப்புக்களுக்கு அடிபணிந்து வாழ்வ தற்கு இந்நாட்டு மக்கள் ஒரு போதும் தயாரில்லை என, வியட்நாம் தேசிய தலைவரின் சிலையை திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

இலங்கை வியட்நாம் இராஜதந்திர உறவுகளை பலப்படுத் தும் வகையில் கொழும்பு பொது நூலகத்தில் வியட்நாம் தேசிய தலைவர்ஹோ சீ மிங்கின் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திரை நீக்கம் செய்து வைத்தார்.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இது துணையாக அமையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.பௌத்த மதம் காரணமாக வியட்நாம் மக்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையே நெருங்கி உறவுகள் இருந்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வரலாற்று ரீதியாக நோக்கினாலும் ஹோ சீ மிங் எனும் வீரரின் உருவ சிலையை இலங்கையில் நிர்மாணிப்பது மிக பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். நாம் இருவரும் மிக அமைதியாகவும் சுயாதீனமாகவும் வாழ கூடிய இரு நாட்டவர்கள் என்பதினால் எம் இருவருக்கிடையே நெருங்கிய தொடர்புண்டு.

ஆக்கிரமிப்பாளர்களை நாம் என்றும் எதிர்த்தோம். காலணித்துவவாதிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் நாம் என்றும் போராடினோம். 1970ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் நான் முதல் முறையாக போட்டியிடும் போது திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அந்த விஞ்ஞாபனத் தில் சுதந்திர போராட்டத்திற்காக அன்று நாம் குரல் கொடுத்தது நினைவு கூரப்பட்டது.

அன்று நான் அங்கு நன்றியுரை நிகழ்த்தும் போதும் வியட்நாமை ஒன்றிணைக்கும் அந்த போராட்டத்திற்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். வியட்நாம் தேசிய தலைவரின் இந்த உருவசிலையை திரை நீக்கம் செய்யும் சந்தர்ப்பத்தில் தனக்கும் தொடர்புபட கிடைத்ததையிட்டு நான் நன்றி தெரிவிக்கின்றேன். வியட்நாம் மக்களுக்கு இலங்கை மக்களின் வாழத்துக்களை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

வியட்நாம் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான பாம் பிங் மிங் உரையாற்றுகையில் வியட்நாமின் சுதந்திர போராட்டத்திற்காக இலங்கையர்கள் வழங்கிய ஆதரவை தமது மக்கள் என்றும் மதிப்பதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு தெளிவான ஓர் எதிர்காலம் இருப்பதாக கூறிய அவர் இலங்கை அபிவிருத்தியடைவதற்கு நீண்டகாலம் செல்லாது என வியட்நாம் துணை பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். வியட்நாம் தேசிய தலைவரின் விசேட புகைப்பட கண்காட்சியொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

1 comments :

Anonymous ,  November 27, 2013 at 12:45 PM  

It is absolutely correct.Sri lanka is
a soveriegn independent country.It cannot be dictated at any circumstances because slavery colonialism imperialism are almost over.But Sri lanka has to keep an eye on its law peace and order,specially protection of the public.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com