Tuesday, November 19, 2013

ஐந்தறிவு ஜீவனான நாய்க்குட்டியின் சகோதர பாசம்! (படங்கள் இணைப்பு)

கார் ஒன்றால் மோதுண்டு உயிரிழந்த தனது சகோதரியான பெண் நாயின் உடலுக்கு அருகில் நாய்க்குட்டியொன்று இரு நாட்களாக துயரத்துடன் காவலிருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் தென்மேற்கு சீனாவில் இடம்பெற் றுள்ளது.சிசுவான் மாகாணத்தில் பிக்ஸியன் நகரில் உயிரி ழந்த மேற்படி பெண் நாயின் உடலை விட்டு அகல மறுத்து இரு நாட்களாக அந்த நாய்க்குட்டி காவல் இருந்துள் ளது.அந்த வழியாக சென்ற கார்கள் நாயின் சடலத்தின் மீது மீளவும் மோதாமல் தடுக்கும் முகமாக, நாய்க்குட்டி அந்தக் கார்களை நோக்கி குரைத்து அவற்றை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாய்க்குட்டியின் பரிதாப நிலையை அவதானித்த பிரதேசவாசியொருவர் இறந்த நாயை குழியொன்றை தோண்டி புதைக்க முயன்ற போது, குழிக்குள் இருந்த நாயின் சடலத்தின் மீது குதித்த நாய்க்குட்டி அங்கிருந்து நகர மறுத்துள்ளது.இந்நிலையில் பிரதேசவாசிகள் பெரும் போராட்டத்தின் மத்தியில் நாய்க்குட்டியை அங்கிருந்து வெளியேற்றி இறந்த நாயை மண்ணால் மூடினர்.

இதனையடுத்து அந்த நாய்க்குட்டி உள்ளூர் மிருக பாதுகாப்பு நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பராமரிப்பின் கீழ் வாழ்வதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.







2 comments :

Anonymous ,  November 19, 2013 at 10:38 AM  

Sometimes animals are more sensitve than the human beings.You have to watch carefully the animals and the birds.You will realize how sensitive they are.We never feel anything,while we kill them for our meals or for sports.We haven't got the tender heart,but unfortunately we have hardened hearts like huge rocks.
We learn a lot of good lessons from this dog's and the dead dog's photograph

Anonymous ,  November 19, 2013 at 5:22 PM  

We have good experiences with the dogs,cattle and even with the poultry.How sensitive they are,really its touched our hearts.But we rock hearted people kill them eat,even we don't care what our hindu religion teaches us.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com