Wednesday, November 20, 2013

பிரபல நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதி ஹாஸனின் வீட்டுக்குள் புகுந்து பலத்கார முயற்சி!

உலக நாயகன் கமல் ஹாஸனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கிவிட்டு பலத்காரம் செய்ய நபரொ ருவர் முயற்சி செய்துள்ளார். இச்சம்பவத்தால் பொலி வூட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து ஸ்ருதி ஹாஸன் தரப்பினர் பொலிஸில் முறை ப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக நபரொ ருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். 'ராமய்யா வஸ்தாவய்யா' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்துக்கொண்டிருந்த போதும் இந்நபர் ஸ்ருதியை நெருங்க முயன்றுள்ளார். ஆனால் அத்திரைப்படக் குழுவினர் அந்நபரை விரட்டியடித்துள் ளனர்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு முப்பை, பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து கழுத்தை நெறிக்க முயன்றாராம்.

உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதேநேரம் பலமாகக் குரலெழுப்பி காவலாளிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்து ள்ளனர்.

அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா? ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து இதுவரையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com