Thursday, November 7, 2013

எவராவது பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டிருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும்! சந்தேக நபர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பலரிடமிருந்தும் இலட்சக் கணக்கான பணத்தை மோசடி செய்து வந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த எவராவது கனடா செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 0773917092 என்ற கையடக்க தொலைபேசி ஊடாக உடனடியாக அறியத் தருமாறு பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உபுல் சமரசிங்கவிடம் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொள்கிறது. குறித்த நபரை ஜா-எல பிரதேசத்தில் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டு உட்பட பலரது பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கனடா அனுப்புவதாக கூறி பலரின் கடவுச் சீட்டுகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுள்ள இச் சந்தேக நபர் பலரிடமிருந்து பல இலட்சம் பணத்தை மோசடியாக பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது எனவும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத் துடன் செயற்படுமாறும் பொலிஸ் தலைமையிடம் பொது மக்களை கேட்டுக்கொள்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com