Thursday, November 7, 2013

காலஞ்சென்ற டி.ஏ.ராஜபக்ஸவின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நெணச- TWOகல்வி தொலைக்காட்சி சேவை!

சிரேஷ்ட அரசியல்வாதியான காலஞ்சென்ற டி.ஏ.ராஜ பக்ஸவின் 46ஆவது நினைவை முன்னிட்டு, இடம் பெற்றது நிகழ் வொன்று தங்காலை பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமை இடம் பெற்றதுடன் தங் காலை நகர் மத்தி யிலுள்ள டி.ஏ.ராஜபக் ஸவின் உருவச் சிலைக்கு அருகில், சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, மாகாண முதலமைச்சர், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி பாரியார் ஷிராணி ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு டி. ஏ.ராஜபக்ஸ மன்றத்தினால் புலமை பரிசில்களும் வழங்கப்பட்டன. இதேவேளை, டி.ஏ.ராஜபக்ஸவின் நினைவு தினத்தை முன்னிட்டு நெணச- வுறுழு கல்வி தொலைக்காட்சி சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், டி.ஏ.ராஜபக்ஸ மன்றத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அங்குரார்ப்பணம் செய்து செய்யப்பட்டது.

1905ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பிறந்த டி.ஏ.ராஜபக்ஸ, 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற இடைத் தேர்தலில் அரச மந்திர ஆலோசனை சபைக்கு போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்டார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 1947ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி வரை அவர் விவசாயம் மற்றும் காணி அதிகார சபையின் உறுப்பினராக செயற்பட்டார்.

பின்னர் 1947ஆம் ஆண்டு பெலிஅத்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையின் முதலாவதுp பாராளுமன்றத்திற்கு தெரிவான டி.ஏ.ராஜபக்ஸ, 1947ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டு வரை பெலிஅத்த மக்கள் உறுப்பினராக செயற்பட்டார். 1957ஆம் ஆண்டிலிருந்து பதில் விவசாய அமைச்சராக செயற்பட்ட டி.ஏ.ராஜபக்ஸ, 1959அம் ஆண்டு விவசாய அமைச்சராக தெரிவானார்.

பின்னர் 1960ஆம் ஆண்டிலிருந்து 1964அம் ஆண்டு வரை இலங்கையின் ஐந்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக செயற்பட்ட அவர், பின்னர் பிரதி சபாநாயகராகவும், குழுக்களின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி டி.ஏ.ராஜபக்ஸ காலமானார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com