Friday, November 29, 2013

தானங்களும் அவற்றின் பலன்களும்......

தானம் செய்யும்போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக் கொள்ளும். எப்பாடு பட்டாவது அதை துடைத்து எறியுங்கள்.நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே.உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்: புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லா தவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்: இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

6.கம்பளி-பருத்தி தானம்: வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்த வர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.

நம்பிக்கையுடன் செய்யுங்கள்... வளம் பெற வாழ்த்துக்கள்...

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com