Thursday, November 7, 2013

தனது தனிப்பட்ட நிதியிலிருந்து நட்டஈட்டை வழங்கிய அமைச்சர் குமார வெல்கம, புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்!

இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி சாரதிகளும், நடத்துனர்களும், கடமையின்போது கையடக்க தொலைபே சிகளை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான சட்டம் இன்று முதல் அமுல்ப்படுத்தப்பட வுள்ளதாக, அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கடமையின்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படு த்துவதே, பல்வேறு விபத்துகளுக்கு பிரதான காரணமென, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, இபோச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையின் போது தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதா கவும், இத்திட்டம் இன்று முதல் அமுல்ப்படுத்தப்படுவதாகவும், அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

சாரதிகள் பரவலாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். இபோச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் கடமையின்போது கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், இன்று முதல் சுற்று நிரூபமொன்றை வெளியிடுமாறு, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இபோச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், தமது கையடக்க தொலைபேசிகளை டிப்போவிடம் ஒப்படைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் சாரதிகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தினால், அது தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்க, நாம் புதிய தொலைபேசி இலக்க மொன்றை அறிவிப்போம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறா மல் இருக்க, நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பண்டாரவளையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மரணமடைந்த மற்றும் காயம டைந்த குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மரணமடைந்த ஒருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதமும், காயமடைந்தோருக்கு 10 ஆயிரம் ரூபா வீதமும் நட்டஈடாக வழங்கப்பட்டது. அமைச்சர் குமார வெல்கமவின் தனிப்பட்ட நிதியிலிருந்து இந்நட்ட ஈடுகள் வழங்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com