Monday, November 4, 2013

முடிவில் , எவ்வித மாற்றமும் இல்லை! மேயராக மீராசாஹிப் செயற்பட முடியாது! - ரவூப் ஹக்கீம்

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் எவ்வித நெகிழ்வு போக்கிற்கும் இடமில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித் துள்ளார்.கல்முனை மேயராக ஷிராஸ் மீரா சாஹிப் செயற்பட முடியா தென்ற முடிவில் , எவ்வித மாற்றமும் இல்லையென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திட் டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பாக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதன்போது கடந்த புதன்கிழமை ஷிராஸ் மீராசாஹிப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கையளிக்கப்பட்டன.

கல்முனை மேயராக தொடர்ந்தும் ஷிராஸ் மீராசாஹிப் செயற்பட அனுமதிக்க வேண்டு மென பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பி னர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் குறித்த கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நிராக ரித்துள்ளார்.

மேயர் விவகாரத்தில் எவ்வித சமரசத்திற்கும் தயாரில்லை. ஷிராஸ் மீராசாஹிப் ஒக்டோபர் 31 ம் திகதி இடப்பட்ட ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும். இதன்மூலம் மாத்திரமே தனக்கெதிரான ஒழுக்காற்று பிரச்சினையை தவிர்க்க முடியுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களும், அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளனர். அவர்களிடமும் தனது தீர்மானத்திலும், நிலைப்பாட்டிலும் எவ்வித மாற்றமும் இல்லையென அமைச்சர் ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாக தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com