Thursday, November 7, 2013

சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் நடத்திய பிரதி கல்வி பணிப்பாளர் கிண்ணியாவிற்கு இடமாற்றம்!

கல்முனை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட கல்முனை வலய திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல். எம். முக்தார் கிண்ணியா கல்வி வலயத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய உடனுக்கு அமுலாகும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் இடமாற்றம் உள் ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகள் கல்முனை சாஹிரா கல்லூரி நிர்வாகத்தினால் விடுக் கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கிண்ணியா கல்வி வலயத்திற்கு மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பிரதி கல்வி பணிப்பாளரின் சகோதரர்களான ஏ.எல்.எம். ஹம்ஸா மற்றும் ஏ.எல்.எம்.நசீர் ஆகிய இருவரும் கல்முனை சாஹிரா கல்லூரியிலிருந்து முறையே கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மற்றும் சாய்ந்மருது மல்ஹரு ஸம்ஸ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இடமாற்றப் பட்டுள்ளனர்.

குறித்த ஏழு அம்சக் கோரிக்கைகள் கல்முனை பிரதேச அரசியல்வாதிகளிடம் கல்முனை சாஹிரா கல்லூரி நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆராயும் விசேட மாநாடொன்று நேற்று புதன்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் ஹாசீம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கப்பார் மற்றும் கல்முனை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஹம்சா ஆகியோர் கலந்துகொண்டார்.

இதன்போது குறித்த பிரதி கல்வி பணிப்பாளரையும் அவரது சகோதரர்களையும் உடனடியாக இடமாற்றுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் பொய் முறைப்பாடுகள் எதனையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் குறித்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் தீர்ப்பது எனவும், இந்த கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. இந்த தீர்மானத்தினை அடுத்தே இந்த இடமாற்றங்கள் உடனடியாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இந்த தீர்மானங்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற நடவடிக்கையினை மேற்கொண்ட அரசியல்வாதிகள் அனைவருக்கும் கல்முனை சாஹிரா கல்லூரி சமூகம் மற்றும் பழைய மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com