Saturday, November 23, 2013

ஆளில்லா போர் விமானங்களை இயக்கி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை மணி அடித்தது சீனா!

தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா ஆளில்லா போர் விமானங்கள் மூலம் அடிக்கடி மற்ற நாடுகளில் உள்ள முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் விமான தாக்குதலில் தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்குப் போட்டியாக சீனாவிலும் இப்போது ஆளில்லா போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நடந்த விமானக் கண்காட்சியில் சிறிய ரக ஆளில்லா விமானங்களை இயக்கி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை மணி அடித்த சீனா, இப்போது முதல் முறையாக ஆளில்லா போர் விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் செங்டு நகரின் மேல் சர்வதேச வழித்தடத்தில் இந்த விமானம் 20 நிமிடங்கள் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் யுஎஸ் பி 2 ஆளில்லா விமானத்தைவிட சீனாவின் விமானம் சற்று சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனா-ஜப்பான் நாடுகளுக்கு இடையில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதால் போர் பதட்டம் உருவான நிலையில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடல் தீவுப்பகுதியில் ஆளில்லா விமானம் பறந்து கண்காணித்ததாக ஜப்பான் கூறிய நிலையில், இப்போது சீனாவின் ஆளில்லா விமானம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com