90 வயது முதியவரை கொன்று இதயம்-நாக்கை தின்ற சைக்கோ வாலிபர் கைது
பிரான்சில் 90 வயது முதியவரை கொலை செய்து அவரது இதயம் மற்றும் நாக்கை சாப்பிட்ட சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு பிரான்சில் ஸ்பெயின் எல்லை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு மாலை வந்த 26 வயது மதிக்கத்தக்க ஆசாமி, திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்து 90 வயது முதியவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து அவரது இதயம் மற்றும் நாக்கை வெட்டியெடுத்து சாப்பிட்டுள்ளான்.
அது மட்டுமல்லாமல் வெறி அடங்காமல், பிணத்தை எரித்துவிட்டு வீட்டையும் கொளுத்தியதை தொடர்ந்து பக்கத்து வீட்டில் வசித்த அந்த முதியவரின் மகன், இதைப் பார்த்து கூச்சலிட்தையடுத்து அங்கிருந்து அகன்ற அந்த சைக்கோ கொலையாளி, மற்றொரு நபரை தாக்கிவிட்டு, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை தாக்கிக்கொண்டிருந்த போது போலீசார் கைது செய்தனர்.
வீடற்ற அந்த சைக்கோ ஆசாமியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 90 வயது நபரை கொலை செய்ய வேண்டும் என்று தன் தலையில் இருந்து குரல் கேட்டதாக கூறியியுள்ளான் இச்சம்பவம் காவல்துறையையும், பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
0 comments :
Post a Comment