Tuesday, November 5, 2013

செனல் 4 அலைவரிசையின் ஊடகவியலாளர் கெலம் மெக்கரேவுக்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு!

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர் கள் மாநாட்டை இலக்கு வைத்து உலகெங்கும் தப்பபிப் பிராயங்களை ஏற்படுத்துவதற்கு செனல் 4 அலைவரிசை முற்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கெலம் மெக்கரே இயக்கி தயாரித்த இலங்கை தொடர்பான விவரண படத்தை புதுடில்லியில் வெளியிடுவதற்காக அவர் இந்தியா வுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.

இதற்காக இவர் வீசாவுக்கா விண்ணப்பித்திருந்த போதும் அவருக்கு இந்திய அரசினால் இதுவரை வீசா வழங்கப்படவில்லை. இவர் கடந்த 8 மாதங்கயுளுக்கு முன்னர் வீசாவுக்காக விண்ணப்பித்திருந்தார். அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங் களிலும் தமது வீசா விண்ணப்பம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் கவனத் திற்கும் கொண்டு வந்திருந்தார்.

தான் இயக்கிய இலங்கை தொட்ர்பான ஆவணப்படங்கள் மூலம் இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே தமக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கெலம் மெக்கரே தெரிவித்துள்ளார்.

3 comments :

Anonymous ,  November 5, 2013 at 10:38 PM  

India is a not phool country and people are not mad! India is a worlds leading and next USA in the world, when people think abaout economi worldwide and capasity of lead.

For India, Callom Mackre is a JUJUBBI like a peonutt!!!!

India know well - this criminell CHANNER 4 Callom Mackre and What this terrorist support TV CHANNEL BASED IN LONDON DOING.

CHANNEL 4 Have there Terroirist support to run there TV station. THATS IT!

Anonymous ,  November 6, 2013 at 10:41 AM  

Mr.Collom Mcray the C4 specialist can spend his time in useful matters.
What he achieves by making fake documentary films and exhibits it
in important events in order to create a much more confusing atmosphere.it is advisable for him to be a good photographer rather creating a nonsense documentary film maker.We have a doubt When he will make a film of IPKF's atrocities in Srilanka...?sooner rather than later

arya ,  November 7, 2013 at 4:43 PM  

"சனல் 4' ஊடகம் இசைப்பிரியா தொடர்பில் வெளியிட்ட காணொளி கட்டமைக்கப்பட்ட பொய். அது ஒரு நாடகம். இது உலகம் முழுவதிலிருக்கும் மக்களுக்கும் தெரியும். தனது பொய் அம்பலமாகிவிட்டது என்பதற்காகவே கெலும் மக்ரே இவ்வாறு சொல்கிறார்.

தனது ஆவணப்படத்தின் மீதான சந்தேகத்தை இல்லாமல் செய்யவே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும். அந்த காணொளியில் பாருங்கள். அதில் காட்டப்படும் பெண்ணின் முகத்தில் பயம் தெரிகின்றதா? புன்சிரிப்புத் தெரிகின்றதா? இவ்வாறு நான் கேட்கவில்லை. உலக மக்கள் கேட்கின்றனர்.

இராணுவச் சிப்பாய் தான் தந்தார் என்றால் உண்மையான ஆதாரங்கள் அவரிடம் இருக்குமானால் அதனை உரியவர்களிடம் கொடுக்கலாம் தானே.

சரி, குறித்த காணொளியில் அந்தப் பெண் மீது வெள்ளைத்துணி போர்த்தப்படுகிறது. அந்த உச்சமாக நடைபெற்ற போர் நேரத்தில் எப்படி வெள்ளைத் துணி அங்கு வந்திருக்கும். அதுவும் சிறிதும் கறைபடாத புத்தம் புதிய துணியாக அது எப்படியிருக்கும்.

இசைப்பிரியாவைப் பற்றி நான் சொல்ல வேண்டும். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்ற ஒரு போராளி. அதுவும் லெப்டினன்ட் கேணல் தரத்தைச் சேர்ந்தவர். அவர்களின் தொலைக்காட்சியில் வேலை செய்தவர். போரின் இறுதிக்கட்டத்தில் அவர்களின் தொலைக்காட்சி இருக்கவில்லை.

அப்பாவிச் சிறுவர்களையே ஒரு வாரப் பயிற்சியோடு போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். இதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. இறுதிக் கட்டத்தில் எங்களிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்கள் இதற்குச் சாட்சி. இந்த அப்பாவிச் சிறுவர்களையே இறுதிக்கட்டத்தில் போருக்கு அனுப்பிய பிரபாகரன், பயிற்சி பெற்ற இசைப்பிரியாவை போருக்கு அனுப்பாமல் விட்டிருப்பாரா?

புலம்பெயர் தமிழர்களில் 90 சதவீதமானவர்கள், நல்லவர்கள். 10 சதவீதத்தினரே எல்லாக் குழப்பமும் செய்கின்றனர். இதுவரை காலமும் போருக்கு ஆயுதங்கள் வாங்கப் பணம் அனுப்பியவர்கள், இப்போது ஊடகங்களை வாங்குகின்றனர்.

கெலும் மக்ரேயின் மனைவி ஒரு தமிழ்ப் பெண். அவரை வைத்தே மக்ரேயை அணுகியுள்ளனர். மக்ரே வெறும் பொம்மை தான். புலம்பெயர் தமிழர்களின் ஆட்டுவிப்புக்கு அவர் ஆடவேண்டியது தான். பிச்சைக்காரன் எப்போதும் புண்ணைக் காட்டியே பிச்சை எடுப்பான். புண் மாறிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அதேபோன்று தான் 10 சதவீதமான புலம்பெயர் தமிழர்களும். அவர்கள் இலங்கையில் மீண்டும் போரை உருவாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் பாடுபடுவது தமது சொந்த நலனுக்காகவே அன்றி தமிழ் மக்களுக்காக அல்ல

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com