Thursday, November 14, 2013

வவுனியாவில் சனல் 4 ஊடகத்திற்கு எதிராக மக்கள் திரண்டு ஆர்பாட்டம்

சனல் 4 ஊடகத்தின் மூலம் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாக வவுனியாவில் மக்கள் இன்று (14) ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்று வட பகுதிக்கு சென்று மேலும் தகவல்களை திரட்டுவதற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள் திட்ட மிட்டிருந்த நிலையிலேயே இவ் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிறவுண் நிலையத்திற்கு முன்னால் ஒன்று கூடிய மக்கள் ஏ9 வீதி வழியாக வந்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜெயதிலக, தர்மபால செனவிரத்ன, முன்னாள் நகரசபை உறுப்பினர் தேசமான்ய குமாரசாமி, மற்றும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆக்ரோசமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏ9 வீதியை தொடர்ந்து மறிக்க மறிக்க முற்பட்ட போதும் பொலிசார் அதனை தடுத்தனர்.

2 comments :

Anonymous ,  November 14, 2013 at 1:18 PM  

Well done, same think should be in KILINOCHCHI, JAFFNA, MANNAR, MULLAITHEVU also.

Hshould be deportet after the arrest by police.

He has not paid rent for van, hvich he used from Anuradapura to Colombo. This is a creminell work,wher one person in visit to Sri Lanka.

He is only in tourist visa or he is in Group With Camaroon, then he has to be With a Camaroon Group only!

He is a criminell.

Anonymous ,  November 14, 2013 at 1:26 PM  

See this one.

பிரித்தானியாவின் சர்ச்சைக்கு உரிய சனல் 4 தொலைக்காட்சி கெல்லும் மக்ரே பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வந்துள்ள நிலையில் குடிவரவு சட்டத்தை மீறி உள்ளார்.

பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தருகின்ற பிரமுகர்கள் இம்மாநாடு தவிர்ந்த வேறுநடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டே விசா வழங்கப்பட்டு இருந்தனர்.

இதை மீறிய காரணத்தால்தான் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் கெல்லும் மக்ரே அடங்கலாக பொதுநலவாய மாநாட்டுக்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் 04 பேர் ஐக்கிய தேசிய கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றமை மூலம் குடிவரவு சட்டத்தை மீறி உள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பின் பேரில் இவர்கள் இதில் பங்கேற்று இருந்தனர்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com