Tuesday, November 19, 2013

சனல்4 வுடன் இணைந்து ஐ.தே.க நாடகம்! மன்னிப்பு கேட்கின்றார்கள் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி, றுவன், தயா!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத் தவில், அரச சார்புபற்ற அமைப்பொன்று நாட்டுக்கு எதிராக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக தாம் மன்னிப்பு கோருவதாகவும், இதுபோன்ற ஒரு நிகழ்வு இடம்பெற் றதை, தாம் அறியவில்லையென்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணா நாயக, றுவன் விஜயவர்தன, கிழக்கு மாகாண சபை உறுப் பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரு மான தயா கமகே ஆகியோர், மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்ற கடந்த வாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் சிலர், அரச சார்ப்பற்ற அமைப்புகளுடன் இணைந்து, நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில், பாரிய சூழ்ச்சிகளை முன்னெடுத்ததாக, சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் பல நாட்கள், சிறிகொத்த தலைமையகத்திற்கு முன்னால், மகா சங்கத்தினரும் பொது மக்களும் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ரி.ரி.ஈ தற்கொலை குண்டுதாரிகளின் சில பெற்றோர்களை சிறிகொத்த தலைமையகத்திற்கு அழைத்து, நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில், அவர்களுடாக இலங்கைக்கு எதிரான பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைப்பதற்கு, அரச சார்ப்ப்றற அமைப்புகள் முயற்சித்துள்ளன.

சனல்-4 வின் ஊடகவியலாளர்கள் கூட, ஐக்கிய தேசிய்க கட்சி தலைமையகத்தில் நுழைந்து, குறித்த காட்சிகளையும், இந்த பெற்றோரின் குரல்களையும், பதிவு செய்து கொண்டமை தொடர்பாக, மகா சங்கத்தினர், ஐக்கிய தேசியக் கட்சியிடம் வினவ சென்ற போது, குழப்பமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், அரச சார்ப்பற்ற அமைப்புகளின் சிலரும் மகா சங்கத்தினர் மீது தாக்குதல் நடாத்தினர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, தம்மை சிறிகொத்தவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த கடிதத்துடன் மகா சங்கத்தினர் அங்கு சென்றபோது, அவர்களை வரவேற்பதை ஒருபுறம் வைத்துவிட்டு, அவர்களை தாக்கியதுடன், அவர்களை துரத்தியடித்தும் உள்ளனர்.

இந்நிலைமையில், மகா சங்கத்தினரும், தேசப்பற்றுள்ள மக்களும் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உட்பட அரச தலைவர் கள் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் செயற்பாடுகளை சீர்குலைக்க விரும்பாத காரணத்தினால், அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

எனினும் இன்றைய தினம் மகா சங்கத்தினர் இது தொடர்பாக வினவுவதற்கு, சிறிகொத்தவிற்கு சென்றபோது, ஆரம்பத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த எவரும் முன்வரவில்லை. இறுதியில் அவ்விடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக, றுவன் விஜேவர்தன மற்றும் தேசிய அமைப்பாளர் தயா கமகே ஆகியோர், சிறிகொத்தவிற்கு சென்றுள்ளனர். அங்கு கூடியிருந்த மக்கள், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மகா சங்கத்தினரின் வேண்டுகோளின்படி, மக்கள் அமைதியடைந்து, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும், கருத்து தெரிவிப்பதற்கும், சந்தர்ப்பம் வழங்கினர்.

அங்கு அவர்கள் மூவரும், நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் செயற்பாடுகளோ, பிரிவினைவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளோ, சிறிகொத்தவில் இடம்பெற்றமை, தாம் அறிந்து வைக்கவில்லை. எனினும், அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால், மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோருவதாக, அவர்கள் மூவரும் தெரிவித்தனர்.

எனினும், இந்த செயற்பாடுகளை, ஏற்பாடு செய்து, அன்று சிறிகொத்தவில் இருந்த கட்சியின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக, பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அல்லது பொது எதிர்க்கட்சியின் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர், மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோர வருகை தரவில்லை. இது குறித்து மகா சங்கத்தினர், அவர்களுக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்தனர்.

2 comments :

Anonymous ,  November 19, 2013 at 8:27 PM  

This is a LTTE NET WORK, WHICH HAS BEEN WITH UNP HEADS!


VERY GOOD, THAT:

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணா நாயக, றுவன் விஜயவர்தன, கிழக்கு மாகாண சபை உறுப் பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரு மான தயா கமகே ஆகியோர், மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.



purampokku porukki puli kaadayarkalum, MANO KANESAN PONDRA PACHCONTHIKALUM INNUM EVVALAVU KAALAM?

Anonymous ,  November 20, 2013 at 6:14 AM  

When the incident had given a negative result they guys realized their unexcusable mistakes.But however the downfall of your party had already started as it has not got
a good leader like the late most repected leader Mr.Dudley Senanayake.
The best and unforgettable person in the Srilankan poltics.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com