Thursday, November 21, 2013

கிழக்கில் 252 பேருக்கு 15.2 மில்லியன் ரூபா நட்ட ஈடு!!

யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 252 குடும்பங்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப் பட்ட 252 குடும்பங்களுக்கு, நஷ்டஈட்டு காசோலை வழங் கும் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ரி.ரி.ஆர்.டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற இக்கூட் டத்தில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் சந்திரசிறி முத்துகுமாரண பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்தார்.

அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமயஸ்தலங்களுக்கும் காசோலைகள் வழங்கப்பட்டன. 252 பேரு க்கும், அவரவர் பாதிப்புக்கேற்ப, உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 15.2 மில்லியன் ரூபா நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு அதிகார சபை, இதனை ஏற்பாடு செய்திருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com