Thursday, November 21, 2013

25 வயது மனைவிக்கு தீ வைத்த 29 வயது கணவன் கைது

மனைவியை தீ வைத்துக் கொன்ற கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அக்மீமன - தல்கஸ்யாய பகுதி வீடொன்றில் கடந்த 18ம் திகதி மாலை கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கணவனை பயமுறுத்தவென மனைவி தனது உடம்பில் மண்ணெண்னை ஊற்றிக் கொண்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தீப்பெட்டியை எடுத்த கணவர் மனைவிக்கு தீ வைத்துள்ளார்.

இதனால் கடும் எரிகாயங்களுக்கு உள்ளான மனைவி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (19) இரவு உயிரிழந்துள்ளார்.

25 வயதுடைய சத்துரிக்கா என்ற பெண்ணே உயிரிழந்த நிலையில் அவரின் கணவரான 29 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (20) அவர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 2013-12-03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com