Wednesday, October 16, 2013

சுவிஸில் கிழக்கை மையப்படுத்திய உதயம், முனைப்பு எனும் இரு அமைப்புக்களின் இருவேறு நிகழ்வுகள். (அறிவித்தல்)

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி சுவிட்சர்லாந்தில் இரு பொது அமைப்புக்கள் செயற்படுகின்றது. இவ்விரு அமைப்புக்களும் சுவிட்சர்லாந்தில் வருடம்தோறும் கலை நிகழ்வுகளை நாடாத்தியும் வருகின்றது. இவருடத்திற் கான நிகழ்வுகள் இம்மாதம் 27ம் திகதி மற்றும் எதிர்வரும் மாதம் 24 திகதி இடம்பெறும் என இரு அமைப்புக்களும் அறிவித்தல் விடுத்துள்ளது.

சுவிஸில் முனைப்பின் கதம்பமாலை

இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர் லாந்தில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனத்தின் கதம்பமாலை; நிகழ்வு எதிர்வரும் 27.10.2013அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11மணியளவில் Gemeinschaftzentrum,Bodenacker25, 8046 Zürichஇல் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் சிறப்பு நடனங்கள் உட்பட நம்மவர்களின் பல்வேறு பட்ட கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுக்கான அனுமதி இலவசம் எனவும் முனைப்பு நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.




சுவிஸ் நாட்டில் உதயம் விழா 24.11.2013

2004.12.26 ஆண்டு பேரழிவுதனை ஏற்படுத்திய சுனாமி பேரலை நமது நாட்டில் இலங்கையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உறவுகளின்றி ஆதரவின்றி துன்பதனை அனுபவித்துதை நாம் அறிவோம் அவரகளின் துயரங்களை தங்களால் முடிந்தளவு தீர்ப்பதெற்கென சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கைவாழ் கிழக்குமாகாண மக்கள் உதயம் அமைப்பினை உருவாக்கினர் ஒவ்வொரு வருடமும் கலை கலாச்சாரவிழாநிகழ்ச்சி ஒன்றை நடாத்தி மக்கள் மனமுகர்ந்து தரும் உதவிகளை கொண்ட நாட்டில் அனாதரவாக்கப்பட்ட நாம் உறவுகளுக்கு உதவிவருவது வழமையானதொன்றாகும் இதேபோன்று இவ்வருடமும் உறவுகளுக்கு உதவும் கரங்கள் நிகழ்ச்சி தனை 24.11.2013 அன்று சிறப்பாக நடாத்தவுள்ளனர் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம் அதேவேளை இவ்சிறப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் உதயம் அமைப்பினர் அன்புடன் அழைக்கின்றனர்

இவ்வண்ணம்
உதயம் அமைப்பினர்



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com